கருத்தரிப்பில் AI தொழில்நுட்பம் - கொலம்பியா ஆராய்ச்சியாளர்கள் சாதனை
14 ஆனி 2025 சனி 05:49 | பார்வைகள் : 4974
19 ஆண்டுகள் குழந்தைக்காக காத்திருந்த பெண்ணொருவரை STAR (Sperm Tracking and Recovery) எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் கருவுறச் செய்து கொலம்பியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
கொலம்பியா பல்கலைக்கழக கருத்தரிப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்களே இவ்வாறு வெற்றிகரமாக குறித்த பெண்ணை செயற்கை முறையில் கருதரிக்க வைத்துள்ளனர். AI முறையை பயன்படுத்தி இப்படி செய்வது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகின்றது.
இந்த சாதனை ஆண்களின் மலட்டுத்தன்மை பிரச்சனைகளுக்கு, குறிப்பாக விந்துவில் உயிரணுக்கள் இல்லாத (azoospermia) நிலை உள்ளவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
STAR எனப்படும் இந்த செயன்முறையானது அதிநவீன இமேஜிங் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு இரண்டையும் பயன்படுத்தி விந்து மாதிரிகளை ஸ்கேன் செய்கிறது எனவும், இது ஒரு மணி நேரத்திற்கு 80 லட்சம் படங்களை எடுக்கக்கூடியது எனவும்,
இந்த AI அல்காரிதம், விந்துவில் உள்ள உயிரணுக்களை சிறப்பாக அடையாளம் காண்கிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இம் முறை மூலம் விந்து மாதிரிகளில் மிகச் சிறிய உயிரணுக்களைக் கண்டறிந்து, அவை கருப்பைக்குள் நுட்பமாக செலுத்தப்படுவதாகவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் இணையும் புதிய பரிமாணமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இது “AI, இனப்பெருக்க சிகிச்சையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த திட்டத்தின் தலைவர் டாக்டர் ஜெவ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்து.


























Bons Plans
Annuaire
Scan