தென்னாப்பிரிக்காவில் வெள்ளம் - 78 பேர் பலி

14 ஆனி 2025 சனி 08:49 | பார்வைகள் : 1132
தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் ஏற்பட்டுள்ள வெள்ளபெருக்கில் சிக்கி 78 பேர் உயிரிழந்துள்ளனர்.
100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
வீடுகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
கனமழை, வெள்ளப்பெருக்கால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கனமழையால் பலர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
கனமழையால் பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அந்நாட்டில் பெய்துவரும் கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கனமழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025