தென் ஆப்பிரிக்காவிற்கு புகழ்பெற்ற நாள்-டெஸ்ட் கிண்ணத்தை வென்றதற்கு சங்கக்காரா வாழ்த்து

14 ஆனி 2025 சனி 19:38 | பார்வைகள் : 1780
WTC 2025 கிண்ணத்தை வென்ற தென் ஆப்பிரிக்க அணி குமார் சங்ககாரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான WTC இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
27 ஆண்டுகளுக்கு பின்னர் ஐசிசியின் கிண்ணத்தை வென்ற தென் ஆப்பிரிக்காவிற்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காராவும் (Kumar Sangakkara) தனது வாழ்த்தினை கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "போஷ் மற்றும் பூம்! தென் ஆப்பிரிக்காவுக்கு என்ன ஒரு வெற்றி.
அவர்கள் திறமையானவர்களாகவும், அவுஸ்திரேலியவர்களும் விரும்புபவர்களாகவும் உள்ளனர்.
அது டெம்பா பவுமாவின் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. கிண்ணத்தை வெல்வதற்கான பாதையை அவர்களின் வலுவான நோக்கம், ஆர்வம் மற்றும் நம்பிக்கை என அனைத்தும் அணியாக காட்டியுள்ளனர். தென் ஆப்பிரிக்கவிற்கு புகழ்பெற்ற நாள்" என தெரிவித்துள்ளார்.