ஈரான் மீண்டும் அணுஆயுத பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்! - மக்ரோன் வலியுறுத்தல்!!

14 ஆனி 2025 சனி 21:17 | பார்வைகள் : 2670
அணு ஆயுத ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு மீண்டும் ஈரான் வரவேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.
”உடனடியாக பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பவேண்டும்!” என ஈரானிய ஜனாதிபதி Massoud Pezeshkian இடம் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார். இன்று ஜூன் 14, சனிக்கிழமை அவருடன் தொலைபேசி வழியாக உரையாடிய மக்ரோன், அவரிடம் இதனை வலியுறுத்தியதாக தெரிவித்தார்..
“ஈரானின் அணு ஆயுத பிரச்சனை பாரதூரமானது. அதனை பேச்சுவார்த்தைகள் மூலமே சரிசெய்ய முடியும்.” எனவும் மக்ரோன் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கும் - ஈரானுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு நடுவே இஸ்ரேல் ஈரானை தாக்கியிருந்தது. அதை அடுத்து ஈரான் பதில் தாக்குதல் விடுத்தது. முதன்முறையாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரை ஏவுகணைகள் மூலம் ஈரான் தகர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.