இஸ்ரேல்-ஈரான் தாக்குதல் - பிரான்சில் வரலாறு காணாத விழிப்புநிலை - உள்துறை அமைச்சர்!
15 ஆனி 2025 ஞாயிறு 04:05 | பார்வைகள் : 3501
இஸ்ரேல் ஈரானில் நடைபெறும் தாக்குதல்கள் மற்றும் அதற்கு பதிலாக ஈரான் ஏவிய ஏராளமான ஏவுகணைகளால் சர்வதேசத்தில் பரபரப்பான நிலை உருவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புருனோ ரத்தையோ நாட்டில் 'தீவிரத் தாக்குதல் எச்சரிக்கை' நிலையை உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்பு அதிகரிக்கப்படும் இடங்கள்:
இஸ்லாமிய யூத மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டு இடங்கள்
பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள்
நகராட்சி அலுவலகங்கள், நிறுவனங்கள், அரசுப் பணிமனைகள்
கலை நிகழ்ச்சிகள், பெரும் நிகழ்வுகள்
அருங்காட்சியகங்கள், பெரும் ஆய்வரங்குகள்.
இவை அனைத்தும் இராணுவம், உளவுத்துறை சேவைகள் மற்றும் காவற்துறையினரால் கண்காணிக்கப்படும்.
ஏன் இந்த விழிப்புணர்வு?
இஸ்ரேல்இ ஈரானில் முக்கிய ராணுவ மற்றும் அணு தளங்களை தாக்கியது. அதில் உயர் ராணுவத் தலைவர்கள் பலி ஆனனர். இதற்கு பதிலாக ஈரான் பல ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இதன் தாக்கம் பிரான்சையும் உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தலாக மாறக்கூடும் என கருதி Vigipirate திட்டம் மீண்டும் 'அவசரத் தாக்குதல் எச்சரிக்கை நிலை'க்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையில் "Sentinelle" என்ற இராணுவ பிரிவு முக்கிய பங்கு வகிக்கும். முக்கிய இடங்களை படையுடன் நேரடி கண்காணிப்பு செய்யப்படும்.
கவனிக்கப்படுவோர்:
ஈரானுடன் தொடர்புடையவர்கள்
ஈரானைச் சேர்ந்த பிரெஞ்சுக் குடிமக்கள்
இவர்கள் மீது உளவுத்துறையின் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அவதானிப்பை பலப்படுத்தி உள்ளனர்.
இஸ்ரேல்-ஈரான் தாக்குதலின் பின்விளைவாகஇ பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. மக்கள் மிகுந்த இடங்களில் "Sentinelle" படைகள் மற்றும் காவற்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கைகள் நாட்டு உள்நிலை நலனுக்காக அவசியம் என்பதையும் அச்சம் இல்லாமல் விழிப்புடன் இருப்பது தேவை என்பதையும் அரசு வலியுறுத்தி உள்ளது.

























Bons Plans
Annuaire
Scan