கிரீன்லாந்துக்கு அவசர பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மக்ரோன்!!
15 ஆனி 2025 ஞாயிறு 06:42 | பார்வைகள் : 7811
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இன்று ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை கிரீன்லாந்துக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
ஆர்டிக்ட் துருவத்தில் இடம்பிடிக்கும் முயற்சியில் உலக வல்லரசுகள் முண்டியடித்து போட்டி போடுகின்றன. அதில் பிரான்சும் ஒன்று. இன்றைய இந்த பயணம் ஆர்டிக்ட் பகுதிக்கான இடம்பிடித்தல் விவகாரம் தொடர்பாக அமைந்துள்ளது.
கிரீன்லாந்து தலைநகர் Nuuk இனை இன்று முற்பகல் 11.30 மணிக்குச் சென்றடையும் மக்ரோன், அங்கு பிரதமர் நீல்சனைச் (Jens-Frederik Nielsen) சந்திக்க உள்ளார். அதன் பின்னர் புவிவெப்பமடைந்தலைக் கண்காணிக்கும் கிரீன்லாந்துக்கான ஆராய்ச்சி மையத்துக்குச் செல்ல உள்ளார். பின்னர் அவர் ஊடக சந்திப்பிலும் கலந்துகொள்ள உள்ளார். இந்த சந்திப்பில் மக்ரோனுடன், கிரீன்லாந்து பிரதமரும் உடன் இருப்பார்.
ஆர்டிக்ட் துருவம் மிக வேகமாக உருகி வருகிறது. கடல்நீர்மட்டம் 1.8 மீற்றராக உயர்ந்துள்ளது. இந்த வடதுருவ பனிப்பாறைகள் உருகி கடலாக மாறுவதால், ஐரோப்பாவுக்கும் - ஆசியாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்து பாதை ஒன்றை உருவாக்க முடியும் எனவும், இதனால் வர்த்தகத்தில் புதிய கதவு திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan