பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!
 
                    15 ஆனி 2025 ஞாயிறு 09:33 | பார்வைகள் : 1763
தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை அருகே பனைமரத்தில் ஏறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கள் இறக்கினார்.
விவசாயிகள் நலன் கருதியும், மரம் ஏறும் தொழிலாளர்கள் நலன் காக்கவும், கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. எனினும் இந்த கோரிக்கைக்கு முக்கிய அரசியல் கட்சிகள் மத்தியில் ஆதரவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 15) தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை அருகே பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை சீமான் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று கட்சி நிர்வாகிகளுடன் சென்ற சீமான், பனைமரம் ஏறி, கள் இறக்கினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பனை மரத்தில் இறக்கி வந்த கள்ளை அனைவருக்கும் சீமான் வழங்கினார்.
இந்த போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஏற்கனவே பனை மரத்தில் ஏறி சீமான் பயிற்சி மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     



















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan