ஜோன்-லுக்-மெலோன்சோன் யூத விரோதக் கேவலமானவர்! கருத்திற்கு எதிர்ப்பு!

15 ஆனி 2025 ஞாயிறு 13:05 | பார்வைகள் : 1592
ஜோன்-லுக்-மெலோன்சோனை 'யூதரோவிரோத கேவலமானவர்" (salopard antisémite) எனக் கூறியதில் ஏற்பட்ட சர்ச்சையின் தொடர்ச்சியாக, La France Insoumise (LFI) கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மனுவேல் பொம்பார் (Manuel Bompard), சோசலிசக் கட்சியின் (partie socialiste) தலைவர் ஒலிவியர் போர் (Olivier Faure) பொதுமன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இந்த விவகாரம் PS கட்சியின் மாநாட்டில், ஜெரோம் கெஜி (Jérome Guedj) மெலோன்சோனை கடுமையாக விமர்சித்ததையடுத்து உருவானது. 'நான் நேசித்த ஒருவரை இப்போது 'யூதரோவிரோத கேவலமானவர்'என அழைக்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டேன்' என்று கெஜி உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
இது இடதுசாரி கூட்டணி Nupes இல் மேலும் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது. 2022 தேர்தலுக்குப் பிறகு உருவான இந்த கூட்டணியில் ஏற்கனவே வன்மையான கருத்துவேறுபாடுகள் உள்ளன. 7 ஒக்டோபர் ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, LFI கட்சியின் நிலைப்பாட்டை எதிர்த்து ஜெரோம் கெஜி வெளியேறினார்.
அதன்பின் மெலேன்சான் அவரை 'புகார் அளிக்கிற கோழை வகை மனிதர்' எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த பரஸ்பர குற்றச்சாட்டுகள், பிரெஞ்சு இடதுசாரி அரசியலில் நிலவும் உட்பகைகளை வெளிப்படுத்துகின்றன.
ஆனாலும் இவர் மட்டுமல்ல, பல அரசியல்வாதிகளும் மக்களும் கூட ஜோன்-லுக் மெலோன்சோன் மேடைகளில் பகிரங்கமாகத் தெரிவிக்கும் யூதவிரோதக் கருத்துக்களும் பிரச்சாரங்களுமே அண்மையில் பிரான்சில் பெருகிவரும் யூதர்களின் மீதான தாக்குதலிற்கான மூலகாரணம் எனத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உள்துறை அமைச்சர் ஜோன்-லுக் மெலோன்சோனைக் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் எனும் அளவிற்கு அளவிற்கு மீறிய இவரின் யூத எதிர்ப்பு உள்ளது.