ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி
15 ஆனி 2025 ஞாயிறு 13:45 | பார்வைகள் : 1749
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
முதல் முறையாக ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்குவதாக ஹவுதி படையினர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு அமைச்சரகத்தின் தலைமையகம், எரிசக்தி உற்பத்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது.
பதிலுக்கு ஈரான் தரப்பு மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இதை இஸ்ரேல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர். முதல் முறையாக ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்குவதாக ஹவுதி படையினர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையிலும், ஒடுக்கப்பட்ட பலஸ்தீன மற்றும் ஈரான் மக்களின் தரப்பில் இருந்து ஈரான் இராணுவ நடவடிக்கைக்கு உறுதுணையாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டோம் என ஹவுதி செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஹவுதி படையினர் மேற்கொண்டனர்.


























Bons Plans
Annuaire
Scan