Paristamil Navigation Paristamil advert login

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் ! பிரதமர்

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் ! பிரதமர்

16 ஆனி 2025 திங்கள் 08:12 | பார்வைகள் : 2037


கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் தொழில்துறை சீர்திருத்தங்கள் குறித்து இந்தியா, சைப்ரஸ் நாடுகளின் தொழிலதிபர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி எடுத்துக் கூறினார்.

சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக, சைப்ரசுக்கு அவர் சென்றுள்ளார். பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் நேரில் வரவேற்றார். 20 ஆண்டுகளுக்கு பின், சைப்ரசுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.

தொடர்ந்து, லிமாசோலில் இருநாட்டு தொழிலதிபர்களையும் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸூடன் இணைந்து பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இது குறித்து பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், 'வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தும் விதமாக, நானும், அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸூம் இணைந்து, இந்தியா, சைப்ரஸ் நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் தொழில்துறை சீர்திருத்தங்கள் குறித்து விவரித்தேன்,' எனக் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்