Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலின் மீது உக்கிர தாக்குதல் நடத்தும் ஈரான்

இஸ்ரேலின் மீது உக்கிர தாக்குதல் நடத்தும் ஈரான்

16 ஆனி 2025 திங்கள் 10:57 | பார்வைகள் : 1000


ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில், எண்ணெய் கிணறுகள், சேமிப்பு கிடங்குகள் பற்றி எரிகின்றன.

இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது. இரு தரப்பிலும் 4வது நாளாக தாக்குதல் தொடர்வதால் போர் உக்கிரமடைந்துள்ளது.

இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.


அந்த பகுதி தீ மூண்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய அரச ஊடகமான ஹான் தாக்கப்பட்ட பல பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவசரசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதில் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலின் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது

 

வர்த்தக‌ விளம்பரங்கள்