கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர்: சொல்கிறார் அண்ணாமலை!
 
                    16 ஆனி 2025 திங்கள் 16:54 | பார்வைகள் : 3453
முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கி கொண்டு இருக்கிறார் என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
திருப்பூரில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: பார்லிமென்டில் மக்கள் தொகை அடிப்படையில், எம்.பி.,க்கள் எண்ணிக்கை நிர்ணயம் செய்ய போவது கிடையாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஒருத்தருக்கு எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள் என்பது கணக்கு கிடையாது. புதிய மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.,க்கள் எண்ணிக்கையை தீர்மானிக்க போவது கிடையாது.
எத்தனை தேர்தல் வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கி கொண்டு இருக்கிறார்.
கள் இறக்க தடை நீக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. மத்திய அரசின் திட்டங்களை வரவேற்க வேண்டும்; நிதிப்பங்கீடை வைத்து முதல்வர் அரசியல் செய்யக்கூடாது. மத்திய அரசு 100 சதவீத நிதி உதவி அளிக்கும் திட்டங்கள் பற்றி முதல்வர் பேசுவதில்லை. 4 ஆண்டு ஆட்சிக் காலத்தின் ரிப்போர்ட் கார்டை முதல்வர் வெளியிட வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு
        CCTV - VIDÉO SURVEILLANCE 24 மணி நேர வீடியோ கண்காணிப்பு         
     


 
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan