ஈரானின் பயங்கரம் எல்லை கடந்து விட்டது - பிரெஞ்சுப் பணயக் கைதிகள் எங்கே?
 
                    16 ஆனி 2025 திங்கள் 13:58 | பார்வைகள் : 2824
2022 மே 7-ம் தேதி, ஈரானில் சுற்றுலா பயணத்தின் கடைசி நாளன்று, சிசீல் கோலர் (CÉCILE KOHLER) 40 வயது, பிரெஞ்சு மொழி ஆசிரியர் மற்றும் அவரது காதலர் ஜாக் பரிஸ் (JACQUES PARIS) ஏற்கனவே பணி ஓய்வு பெற்றவர், ஆகியோர் ஈரான் அரசால் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மீது உளவு நடவடிக்கைகள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவர்கள் தற்போது தீவிர அரசியல் கைதிகள் அடைக்கப்படும் 'எவின்' சிறையின் 209வது பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய ஈரான்-இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் பரிமாற்றங்கள் காரணமாக, இவர்களின் குடும்பத்தினர் மிகவும் பயந்த நிலையில் உள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன், கடந்த சனிக்கிழமை, ஈரான் ஜனாதிபதியுடன் நேரடியாக பேசியுள்ளார்.
«நம் நாட்டவரான சிசீல் மற்றும் ஜாக்கின் உடனடி விடுதலையை நான் வலியுறுத்துகிறேன். மூன்று ஆண்டுகளாக ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் அவர்கள் வைத்திருக்கப்படுகிறார்கள்» என மக்ரோன் தெரிவித்துள்ளார்.
«அவர்களது மனிதாபிமான நிபந்தனைகள் 'சித்திரவதை' அளவுக்கு கெடுதலானவை» என குற்றம் சுமத்தினர்.
பிரான்ஸ், ஈரானை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு உரிமை மீறப்பட்டது என்பதே பிரதான குற்றச்சாட்டு.
ஐந்து பிரெஞ்சு கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், சிசீல் மற்றும் ஜாக் மட்டும் இன்னும் பிணையில் விடப்படாதவர்களாக உள்ளனர். அவர்கள் இருவரும் ஈரானில் வைக்கபட்டுள்ள கடைசி பிரெஞ்சு கைதிகள் ஆவார்கள்.
மூன்று ஆண்டுகளாக சிசீல் கோலரும் ஜாக் பரிஸும் ஈரானில் கடுமையான சூழ்நிலைகளில் வைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல்-ஈரான் இடையிலான பதற்றம் அவர்களது நிலையை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளது. அவர்களது குடும்பம், பிரான்ஸ் அரசின் நடவடிக்கைகளை விரைவுபடுத்த கோருகிறது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்
        Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan