Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலுக்கு தன்னைத் தானே காத்துக்கொள்ளும் உரிமை உள்ளது - பிரதமர்!!

இஸ்ரேலுக்கு தன்னைத் தானே காத்துக்கொள்ளும் உரிமை உள்ளது - பிரதமர்!!

16 ஆனி 2025 திங்கள் 16:44 | பார்வைகள் : 5656


பிரான்சின் பிரதமர் பிரான்சுவா பய்ரூ, இன்று ஜூன் 16ஆம் தேதி பூர்ஜே வானூர்தி கண்காட்சியில் பேசும் போது 'தன் இருப்பே ஆபத்தில் உள்ளபோது இஸ்ரேலுக்கு தன்னை காப்பாற்றும் உரிமை உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

ஈரான்; இலிருந்து வரும் அச்சுறுத்தல் உடனடியானதாகவும், உயிர்வாழ்வுக்கே ஆபத்தானதாகவும் உள்ளது' என்றும், தற்போதைய நிலைமை 'மிக மோசமான ஒரு பேரிடர் சூழ்நிலை' என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையேயான கடுமையான முரண், உலகெங்கும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று பய்ரூ எச்சரிக்கிறார். அதில், உலகளாவிய பொருளாதாரம், எரிசக்தி சந்தை, மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளும் பாதிக்கப்படும் என அவர் கூறினார்.

'ஈரானின் அணுஆயுத தயாரிப்புகள் மற்றும் அதன் எதிர்பாராத செயல்கள், மட்டுமல்லாமல், அந்த நாடு தரப்பில் இருந்து இஸ்ரேலை ஒரு இலக்காகவே கருதி, அதை அழிக்கவேண்டும் என்றும் தெரிவித்தே வந்துள்ளனர்,' எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரோன்சுவா பய்ரூவின் கருத்துக்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு உரிமையை வலியுறுத்துவதோடு, ஈரான் சார்ந்த அபாயங்களை பன்னாட்டு சமதளத்திலும் விளக்குகின்றன.

தேவைப்பட்டால் இஸ்ரேலிற்காகக் களமிறங்குவோம் என்ற ஜனாதிபதியின் கருத்தும், இஸ்ரேல் தன்னைக் காத்துக் கொள்ளும் உரிமை உள்ளதென பிரதமர் கூறுவதும் ஒரே விடயத்தையே சுட்டி நிற்கின்றன.

 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்