மீண்டும் அகதிகள் மீட்பு!!

17 ஆனி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 2584
பிரித்தானியா நோக்கி சிறிய காற்றடிக்கப்பட்ட படகில் பயணம் செய்த அகதிகள் சிலர் நேற்று ஜூன் 16, திங்கட்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளனர்.
வடக்கு பிரான்சில் Nord மாவட்டத்தின் Gravelines நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கிருந்து 24 அகதிகளை ஏற்றிக்கொண்டு சிறிய ஆபத்தான படகு ஒன்று பிரித்தானியா நோக்கி பயணித்த நிலையில், அவர்களை CROSS (பிராந்திய செயல்பாட்டு கண்காணிப்பு மற்றும் மீட்பு மையம்) அதிகாரிகள் மீட்டனர்.
அவர்களது படகு மூழ்கும் தருவாயில் இருந்ததாகவும், மூவர் காயமடைந்திருந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, மேலும் இரு படகுகள் நேற்று அதிகாலை பிரித்தானியாவைச் சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025