மீண்டும் கத்தியுடன் பாடசாலைக்குள்!!
17 ஆனி 2025 செவ்வாய் 14:16 | பார்வைகள் : 9142
நேற்று திங்கட்கிழமை பிற்பகலில், பிரான்ஸின், முலூஸ் (Mulhouse - Haut-Rhin)நகரில் உள்ள முழநஉhடin ஆரம்பப்ப் பாடசாலையில் ஒரு 7 வயது சிறுவன் இறைச்சி வெட்டி உண்ணும் கத்தியை (couteau à steak) வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த சிறுவனை பொறுப்பான பெரியவர் வரும்போது வரை காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டதாக காவற்துறையினர தெரிவித்துள்ளனர்.

மாணவர் கத்தியை வைத்திருந்தது சிறுவர்களிடையே மிரட்டல் செய்வதற்காக என்பதை காவற்துறை மற்றும் கல்வி அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். அவர் தனது தோழரை கத்தியால் தாக்க முடியும் என பெருமை பேசித் திரிந்ததாகக் ஸ்ட்ராஸ்பூர்க் கல்வித் திணைக்களத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கத்தி, பபாடசாலையின் நுழைவு நிலையத்தில் மாணவர்களின் பைகள் சோதனை செய்யப்பட்ட போதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இது அதிர்ச்சிகரமான விடயமாக இருப்பதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனைகள் முறையாக நடாத்தப்படுவதில்லை என்பதற்கு, இது முக்கிய எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
இந்தச் சம்பவம், கடந்த வாரம் நோஜோன் நகரில், 14 வயது மாணவன் கல்வி கண்காணிப்பாளர் மெலானியை கத்தியால் கொன்ற சம்பவத்திற்கு பின்னர் நிகழ்ந்துள்ளது.
பிரான்சில் பாடசாலைகளின் பாதுகாப்பு மீதான கவலையை மீண்டும் தூண்டியிருக்கிறது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan