மொஸாட் தலைமையகம் மீது ஏவுகணைத்தாக்குதல் நடத்திய ஈரான்
18 ஆனி 2025 புதன் 07:13 | பார்வைகள் : 2678
இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாட் தலைமையகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், ஈரான் தரப்பில், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பகுதிகளுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல் தொடங்கியிருப்பதாகவும்,
இது இதற்கு முந்தைய தாக்குதல்களைக் காட்டிலும் மிகவும் வலுவான தாக்குதலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேலின் மத்திய கடற்கரைப் பகுதிகள் மற்றும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்கள் அமைந்திருக்கும் பகுதிகளிலும் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஈரானிய ஊடகம் தெரிவித்துள்ளது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan