ஈரானுக்கு அணு ஆயுதம் தேவையா..? - பிரெஞ்சு மக்களின் நிலைப்பாடு என்ன.??!!

18 ஆனி 2025 புதன் 13:02 | பார்வைகள் : 4459
ஈரானுக்கு அணு ஆயுதம் தேவையா இல்லையா என்பது தொடர்பில் பிரெஞ்சு மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் மிக ஆச்சரியமான முடிவு தெரியவந்துள்ளது.
பிரெஞ்சு மக்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒன்பது பேர்
‘ஈரானுக்கு அணு ஆயுதம் இருப்பதை விரும்பவில்லை!” என கருத்து தெரிவித்துள்ளனர். ஈரான் அணு ஆயுதம் தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டே இஸ்ரேல் உடனடியாக ஈரான் மீதான தாக்குதலை ஆரம்பித்தது. மறுபக்கம் அமெரிக்கா அணு ஒப்பந்தத்துக்கு வருமாறு ஈரானை அழைத்து வருகிறது.
இதன் பின்னணியில் ‘ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை விரும்புகின்றீர்களா?” என கருத்துக்கணிப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 87% சதவீதமானவர்கள் “இல்லை” எனவும், 13% சதவீதமானவர்கள் “ஆம்” எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பை CNEWS, Europe 1 மற்றும் Journal du Dimanche ஆகிய ஊடகங்களுக்காக CSA நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதில் 18 வயது நிரம்பிய 1,000 பேர் பங்கேற்றிருந்தனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025