Paristamil Navigation Paristamil advert login

ஈரானின் கமேனி கொல்லப்படுவாரா…?

ஈரானின் கமேனி கொல்லப்படுவாரா…?

18 ஆனி 2025 புதன் 14:02 | பார்வைகள் : 2579


ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, கடந்த 13 ஆம் திகதி இஸ்ரேல் அதன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.

இதற்கு பதிலடியாக, ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இரு நாடுகளுக்குமிடையே போர் வெடித்துள்ளது.

ஈரானின் உச்சத்தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டால் தான் போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து G7 மாநாட்டில் இருந்து பாதியிலே வெளியேறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை அதை விட பாரிய ஒன்று நடக்க உள்ளது என தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா தனது விமானம் தாங்கிய போர் கப்பல்களையும்(GSC), எரிபொருள் நிரப்பும் விமானங்களை மத்திய கிழக்கு நோக்கி நகர்த்தி வருகிறது.

இதன் காரணமாக, பாரிய வான் தாக்குதல் மூலம் காமெனி கொல்லப்படுவாரா என்ற அச்சம் எழுந்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்