Paristamil Navigation Paristamil advert login

பல்பொருள் அங்காடிகளில் ticket restaurant நீட்டிப்பு!!

பல்பொருள் அங்காடிகளில் ticket restaurant நீட்டிப்பு!!

18 ஆனி 2025 புதன் 17:32 | பார்வைகள் : 770


2027 ஜனவரி 1க்குப் பிறகும், பல்பொருள் அங்காடிகளில் ticket restaurant பயன்படுத்த அனுமதி தொடரும் என வணிக அமைச்சர் வேரோனிக் லுவாகி (Véronique Louwagie) நேற்று அறிவித்துள்ளார். 

ஆனால், உணவகத் தொழில்நுட்ப நிபுணர்கள் இது உணவக உரிமையாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் எனக் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் இதை "திசைதிருப்பல்" என்றும், உணவகங்களுக்கு எதிரான நடவடிக்கை என்றும் கூறியுள்ளார்கள்.

அத்துடன், ticket restaurantக்கான உணவகங்களுக்கு உயர்ந்த உச்சவரம்பும், பல்பொருள் அங்காடிகளுக்கு குறைந்த உச்சவரம்பும் என்ற திட்டத்தை அரசு பரிசீலித்து வருகிறது. 

மேலும், காகித ticket restaurantஐ முழுமையாக மின்னணுவாக மாற்றப்பட வேண்டும் என்பதால், 2027 ஆம் ஆண்டுக்குள் காகித ticket restaurantஜ வைத்திருக்கக் கூடாது  என அமைச்சர் எச்சரித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்