Paristamil Navigation Paristamil advert login

'குபேரா' பட விழாவில் நடந்தது என்ன ?

'குபேரா'  பட விழாவில் நடந்தது என்ன ?

18 ஆனி 2025 புதன் 18:35 | பார்வைகள் : 1185


தனுஷ் மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடித்துள்ள 'குபேரா' திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கும் நிலையில், அதன் விளம்பர பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்த விளம்பர நிகழ்ச்சிகளில் செய்தியாளர்கள் கேட்கும் பல கேள்விகள் 'கூலி' படம் குறித்தே இருப்பதாகவும், அதற்கு நாகார்ஜுனாவும் ஆர்வத்துடன் அப்டேட்டுகளை அள்ளி வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இது தனுஷுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம்.

'குபேரா' படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் நாகார்ஜுனா கலந்து கொண்டாலும், 'கூலி' படம் குறித்த அப்டேட்டுகளையே அவர் அதிகமாகத் தருகிறார் என்று 'குபேரா' படக்குழுவினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

'கூலி' படம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டால், அதை தவிர்த்துவிட்டு 'குபேரா' குறித்து கேள்வி கேட்கும்படி நாகார்ஜுனா சொல்லியிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். 

ஆனால், 'கூலி' படக் கேள்விகளுக்கு அவர் ஆர்வமாக பதிலளித்து அப்டேட்டுகளை அள்ளித் தருவதால், 'குபேரா' படத்தின் விளம்பர செய்திகள் மங்கடிக்கப்பட்டு, 'கூலி' படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் செய்திகள் பரவி வருகின்றன என்றும் தனுஷ் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், நாகார்ஜுனா ஒரு மிகப் பெரிய நடிகர் என்பதால், அவரிடம் நேரடியாக அதிருப்தி தெரிவிக்க முடியாத நிலையில் தனுஷ் தள்ளப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மொத்தத்தில், 'குபேரா' படத்தின் விளம்பரப் பணிகள் 'கூலி' படத்திற்கு ஒரு மிகப்பெரிய விளம்பரமாக மாறிவிட்டது என்றுதான் திரைத்துறையினர் கூறி வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்