இளம்பெண்களின் மனநலச் சிக்கல்கள் அதிகரிப்பு!
18 ஆனி 2025 புதன் 22:44 | பார்வைகள் : 2756
2024ஆம் ஆண்டில், 10 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மற்றும் இளம்பெண்களின் தற்கொலை முயற்சி மற்றும் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்வதற்கான மருத்துவமனைச் சேர்க்கைகள் மிகவும் அதிகரித்துள்ளதாக DREES அமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக 10-14 வயதுப் பெண்களில் இது 22 சதவீதமாக உயர்ந்துள்ளது. உளவியல் பிரிவிலும், 30 வயதிற்குள் உள்ள பெண்கள் பெரும்பாலும் தற்கொலை முயற்சி அல்லது தன்னைக் காயப்படுத்தும் செயல்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2010ஆம் ஆண்டு முதல் மனநலம் கடுமையாக பாதிக்கப்பட்டதின் ஒரு வெளிப்பாடே என்றும், 2020-ல் ஏற்பட்ட கொரோனா நெருக்கடியால் இது மேலும் மோசமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த மனநலக் குறைபாடுகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று சமூக வலைதளங்களின் தவறான பயன்பாடு என DREES கருதுகிறது. இளம்பெண்கள் இணையத்தில் நேரடியாக எதிர்கொள்ளும் வன்முறை, உளவியல் தாக்கம் ஆகியவை அவர்களது நலனில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இதன் விளைவாக 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக வலைதளங்களை தடை செய்ய வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan