இரட்டிப்பு பாதுகாப்பு அறிவித்த பிரெஞ்சு உள்துறை அமைச்சர்!!

19 ஆனி 2025 வியாழன் 11:21 | பார்வைகள் : 5567
ஈரான் - இஸ்ரேல் தாக்குதலின் எதிரொலியாக பிரான்சில் யூதர்கள் மீது தாக்குதல் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதை அடுத்து, பிரான்சில் உள்ள யூத வழிபாட்டுத்தலங்களுக்கு இரண்டு மடங்கு பாதுகாப்பு போடப்படுவதாக உள்துறை அமைச்சர் Bruno Retailleau
அறிவித்துள்ளார்.
நேறு புதனிழமை காலை பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை தலைமை அதிகாரிகள் மற்றும் யூத அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்டோரோடு உள்துறை அமைச்சர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
”சில டெலிகிராம் கணக்குகளை கண்காணித்ததில், யூத அமைப்பினர் வழிபாட்டுத்தலங்கள் மீது வன்முறையை பிரயோகிக்குமாறு தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது. எனவே நாம் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய தருணத்தில் உள்ளோம். ”இரண்டு மடங்கு” பாதுகாப்பு போடப்பட்டுள்ளது” என அமைச்சர் குறிப்பிட்டார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025