Paristamil Navigation Paristamil advert login

ஈரான் - இஸ்ரேல் போர் - இஸ்ரேல் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவ கப்பல்கள்

ஈரான் - இஸ்ரேல் போர் - இஸ்ரேல் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவ கப்பல்கள்

19 ஆனி 2025 வியாழன் 12:39 | பார்வைகள் : 2431


ஈரான் - இஸ்ரேல் பிரச்சினையில் அமெரிக்கா போரில் களம் இறங்குகிறதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

இஸ்ரேல் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவ கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மூண்ட நிலையில் இருநாடுகளும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.

முக்கியமாக இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத தளங்களை குறி வைத்து தாக்கி வருகிறது.

நேற்று ஹைபர் சோனிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசிய ஈரான், போர் தொடங்கிவிட்டது என சூளுரைத்தது.

அதை தொடர்ந்து ஈரானை எச்சரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் போரை நிறுத்திவிட்டு நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என கூறினார்.


அதற்கு பதில் எச்சரிக்கை விடுத்த ஈரான், இந்த போரில் அமெரிக்கா தலையிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்தது. அதை தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்