விசா இல்லாமல் ஈரானை விட்டு வெளியேறும் வழியை அறிவித்த பிரான்ஸ்!!

19 ஆனி 2025 வியாழன் 20:39 | பார்வைகள் : 3560
ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கிடையில் ஏழாவது நாளாக இடம்பெறும் மோதலின் காரணமாக, பிரான்ஸ் அரசு அங்குள்ள பிரஞ்சு குடிமக்கள் விரும்பினால் விசா இல்லாமல் அர்மேனியா (l’Arménie) மற்றும் துருக்கி (la Turquie) வழியாக வெளியேறலாம் என்று அறிவித்துள்ளது.
தனிப்பட்ட முறையில் எல்லையை அடைய இயலாதவர்களுக்கு, வார இறுதிக்குள் கூட்டுப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும். இரு எல்லைகளிலும் பிரான்ஸ் குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.
இஸ்ரேலில் உள்ள பிரஞ்சு குடிமக்கள், ஜோர்தான் (la Jordanie) மற்றும் எகிப்து (l’Égypte) ஊடாக தரைவழி பயணம் செய்து, அங்குள்ள விமான நிலையங்கள் மூலமாக பிரான்சுக்கு திரும்பலாம்.
பிரான்ஸ், இச்சூழலில் அமைதியையும் சமாதானத்தையும் பராமரிக்க அழைப்பு விடுத்ததோடு, ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை கட்டுப்படுத்தும் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025