இரவில் இயங்கும் - மெற்றோக்கள், RER சேவைகள்!

20 ஆனி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 5297
ஆறு மெற்றோ சேவைகளும் ஐந்து RER சேவைகளும் நாளை சனிக்கிழமை இரவு முழுவதும் இயக்கப்படும் என இல்-து-பிரான்ஸ் பொதுபோக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
Fête de la Musique இசைத்திருவிழாவை முன்னிட்டு இந்த சேவைகள் தொடர்ச்சியாக இரவு முழுவதும் இயக்கப்பட உள்ளது. 1, 4 மற்றும் 14 ஆகிய தானியக்க சேவைகளுடன், 2, 6 மற்றும் 9 ஆகிய சேவைகளும் இயக்கப்பட உள்ளது.
RER சேவைகளில் A, B, C, D மற்றும் E ஆகிய சேவைகள் இயக்கப்பட உள்ளன.
அத்தோடு 4.20 யூரோக்களுக்கு சிறப்பு பயணச்சிட்டையும் விற்பனை செய்யப்பட உள்ளது. அதனைப் பயன்படுத்தி எந்த ஒரு பொது போக்குவரத்து சேவைகளிலும் நாள் முழுவதும் பயணிக்க முடியும். இந்த கட்டணம் கடந்த 2024 ஆம் வருடத்தோடு ஒப்பிடுகையில் 5% சதவீதம் அதிகமாகும்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025