சிறுமி சாவு - மூடப்பட்ட இறைச்சிக் கடைகள்!! - இறைச்சிகளை உண்ண வேண்டாம்!
20 ஆனி 2025 வெள்ளி 13:38 | பார்வைகள் : 4073
Hauts-de-France இன் பிராந்திய மருத்துவ சேவையான ARS (Agence régionale de santé ) இரு இறைச்சிக்கடைகளை மூடியதுடன் இங்கு கொள்வனவு செய்த இறைச்சிகளை உண்ண வேண்டாம் எனவும் பணித்துள்ளனர்.
Saint-Quentin (Aisne) நகரில் குழந்தைகள் கடுமையான உணவு நச்சுத்தனமையால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு இறைச்சிக் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இந்த உணவுப் நச்சினால் (intoxications alimentaires) ஒரு குழந்தை உயிரிழந்ததோடு, மேலும் ஆறுபேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Aisne ஆட்சி தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பாதிக்கப்பட்ட குழந்தைகள், நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு சில தினங்களுக்கு முன், அந்த இரண்டு கடைகளிலிருந்து இறைச்சி அல்லது இறைச்சியை அடிப்படையாகக் கொண்ட தயாரிப்புகளை உணவாக எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்த இரண்டு கடைகளின் தயாரிப்புகள் நோய்க்குக் காரணமாக இருந்ததா என்பது தற்போது உறுதியாகக் கூற முடியாதபோதிலும், முன்னெச்சரிக்கையாக இவை மூடப்பட்டுள்ளன. கடைகளில் இருந்து எடுத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவுகள் அடுத்த வாரத் தொடக்கத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவை தவிர, அவை மூடப்பட்டுள்ளதற்காலத்தில், அக்கடைகளில் இருந்து வாங்கிய இறைச்சியை மக்கள் பயன்படுத்தவேண்டாம் எனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஜூன் 12 முதல் சன்குவாந்தன் நகரில் குழந்தைகள் தொடர்பான எட்டு கடுமையான உணவு நச்வுத்தன்மை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவர்களில் ஐந்துபேர் syndrome hémolytique et urémique (SHU) எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு சென்று விட்டனர்.
அவர்களில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
SHU என்பது மிகவும் அபூர்வமான தொற்றுநோயாகும். இது பெரும்பாலும் coli (E. coli) எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. ஆண்டுதோறும் 100 முதல் 165 குழந்தைகள் வரை இந்த நோயால் பாதிக்கப்படுவதாக Santé publique France கூறுகிறது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan