கிரீன் டீ குடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரியுமா ?

20 ஆனி 2025 வெள்ளி 14:37 | பார்வைகள் : 167
ஏராளமான ஆரோக்கிய நன்மைகளுடன் கூடிய ஒரு சக்திவாய்ந்த பானமான கிரீன் டீ-யை உங்கள் டயட்டில் சேர்ப்பது பற்றி நீங்கள் பரிசீலித்தால், காத்திருக்க வேண்டாம். சுமார் 2 வாரங்களுக்கு ஒருவர் கிரீன் டீ தவறாமல் குடித்து வந்தால் அவரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விலும் அற்புதமான மாற்றங்களை காணலாம்.
நீங்கள் வழக்கமாக அருந்தும் காஃபி மற்றும் டீ-க்கு பதில் கிரீன் டீ-யை குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க நேர்மறை விளைவுகளை காணலாம், சுகாதார நிபுணர்கள் கூட இதை ஒப்புக்கொள்கிறார்கள். செரிமானம், கல்லீரல், கணையம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் நிபுணராக திகழும் நிபுணர் டாக்டர் ஜோசப் சல்ஹாப், கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் இரண்டு வாரங்கள் ஒருவர் கிரீன் டீ உட்கொள்வது கூட ஆரோக்கியத்தை எவ்வாறு கணிசமாக மேம்படுத்தும் என்பதை பற்றி விளக்கியுள்ளார்.
ஆரோக்கியமான குடல்: கிரீன் டீ பருகுவது குடலை ஆரோக்கியமாகமாற்றும் என்று ஆராய்ச்சிகள் தொடர்ந்து நிரூபித்துள்ளதாக டாக்டர் ஜோசப்குறிப்பிட்டுள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு microbiology and immunology -ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கிரீன் டீ குடிப்பது மனிதர்களில் பிஃபிடோபாக்டீரியா மற்றும் பிற நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கிரீன் டீ குடிக்க துவங்கி அடுத்த 10 நாட்களில் உங்கள் குடல் பாக்டீரியா மேம்பட தொடங்கும் என்கிறார் இவர்.
கல்லீரல் ஆரோக்கியம்: தொடர்ந்து கிரீன் டீ அருந்துவது என்பது கல்லீரல் செயல்பாட்டின் மேம்பட்ட நிலையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இது உங்கள் கல்லீரலைப் பாதுகாக்கவும், கொழுப்பு கல்லீரல் பாதிப்பு வளர்ச்சியைக் குறைக்கவும் உதவும் என்று டாக்டர் சல்ஹாப் மேலும் கூறினார். International Journal of Molecular Medicine-ல் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வில், அதிக அடர்த்தியான கேடசின்கள் (catechins) கொண்ட கிரீன் டீ-யானது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (NAFLD) நோயாளிகளுக்கு கல்லீரலில் சேரும் கொழுப்பு அளவை குறைத்தது என கூறப்பட்டுள்ளது.
இதய ஆரோக்கியம்: தொடர்ந்து கிரீன் டீ குடிப்பவர்களின் இதய ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடு சிறப்பாக இருப்பதை கவனிக்கலாம். கிரீன் டீ தொடர்ந்து குடிப்பவர்களுக்கு இதய ஆரோக்கியம் மேம்பட்டதாக இருக்கும், அதிகரித்த ரத்த அழுத்தம் குருடும், கொலஸ்ட்ரால் லேப்கள் சீராக இருக்கும், நினைவாற்றல் மேம்படும் மற்றும் டிமென்ஷியா ஏற்படும் அபாயமும் குறைவு. இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகள் உள்ளவர்களிடம் 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், நான்கு வாரங்களுக்கு கிரீன் டீ சாற்றை உட்கொள்ள கேட்டு கொள்ளப்பட்டது.
இறுதியில் இது அவர்களின் ரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்ஃளமேஷனை குறைப்பதன் மூலமும், Leaky gut பாதிப்பை குறைப்பதன் மூலமும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கிரீன் டீ கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் எல்டிஎல் அளவை குறைக்கும் மற்றும் சீரான ரத்த அழுத்தத்தை ஊக்குவிக்கும். கிரீன் டீயில் உள்ள L-theanine ரிலாக்சேஷனை ஊக்குவிக்கிறது, மேலும் மன தெளிவிற்கு துணையாக இருக்கிறது. மருத்துவர் ஜோசப் கூறுகையில், கிரீன் டீசுவையை அதிகரிக்க புதினா அல்லது மல்லிகை ஃப்ளேவரை டயட்டில் சேர்க்கலாம். "காபியை விட இதில் காஃபின் குறைவாக உள்ளது என்று அவர் கூறினார்.
எடையை குறைக்க.. தொடர்ந்து கிரீன் டீ குடிப்பது உடல் எடையை நிர்வகிக்கவும், அதிகமாக இருக்கும் உடல் எடையை குறைக்கவும் உதவும். கிரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் சிறப்பான இதய ஆரோக்கியம், எடை மேலாண்மை மற்றும் அறிவாற்றல் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. 11 ஆய்வுகளை உள்ளடக்கி கடந்த 2020-ஆம் ஆண்டு செய்யப்பட்ட மதிப்பாய்வு ஒன்று டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் உடல் எடை, உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) மற்றும் தொப்பையை குறைக்க கிரீன் டீ உதவும் என்று கண்டறிந்துள்ளது.
எனவே தினமும் தவறாமல் சிறிது கிரீன் டீயை பருக தயங்காதீர்கள். இது குடிக்க துவங்கினால் நன்மைகள் முதல் நாளிலிருந்தே தொடங்கி 10-ஆம் நாளிலிருந்து அதிகமாக தெரியும்.