Paristamil Navigation Paristamil advert login

மத்திய கிழக்குப் போர்: பேச்சுவார்த்தையை முன்னிலைப்படுத்த வேண்டும் - மக்ரோன்

மத்திய கிழக்குப் போர்: பேச்சுவார்த்தையை முன்னிலைப்படுத்த வேண்டும் - மக்ரோன்

20 ஆனி 2025 வெள்ளி 18:41 | பார்வைகள் : 3441


இஸ்ரேல்-ஈரான் போரால் நிலைமைகள் பதற்றமாக உள்ள நிலையில், ஜனாதிபதி எம்யானுவேல் மக்ரோன் இன்று ஜூன் 20 ஆம் தேதி லூ-பூர்ஜே விமானக் கண்காட்சியில், 'பேச்சுவார்த்தையே முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும்' என வலியுறுத்தினார்.

அணு ஆயுத ஆபத்து

மக்ரோன், ஈரானின் அணுசக்தித் திட்டம் ஒரு 'பெரும் அச்சுறுத்தல்' எனவும், இராணுவ நடவடிக்கைகள் மட்டுமே இதை தீர்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.

ஐரோப்பிய முயற்சி

பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகியவை ஜெனீவாவில் ஈரான் வெளிவிவகார மந்திரியுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. இது அணுசக்தி, ஏவுகணைகள் மற்றும் பிரெஞ்சு கைதிகளின் விடுதலை உள்ளிட்டவை குறித்து முழுமையான ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்படும்.

பிரெஞ்சு குடிமக்கள் மீட்பு

அம்மானில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஒரு விமானம் இயக்கப்பட உள்ளது. துருக்கி, ஆமினியா வழியாகவும் பிரெஞ்சு குடிமக்கள் வெளியேற உதவிகள் வழங்கப்படுகின்றன.

போன்ற விடயங்களை ஊடகங்களிடம் மக்ரோன் பதிவு செய்திருந்தார்.
 

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்