அரசு எப்படியோ, அப்படியே அரசு பஸ்களும்; சொல்கிறார் அன்புமணி!

21 ஆனி 2025 சனி 12:12 | பார்வைகள் : 1535
அரசு எவ்வாறு அச்சாணி இல்லாமல் இயங்குகிறதோ, அதேபோல் தான் அரசுப் பஸ்களும் எந்த பிணைப்பும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன என பா.ம.க., தலைவர் அன்புமணி விமர்சனம் செய்துள்ளார்.
அவரது அறிக்கை: தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற கிராமத்தில் ஓடிக் கொண்டிருந்த அரசு பஸ்சின், பின்புற அச்சு உடைந்து இரு பின் சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடியிருக்கின்றன. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் காயமடைந்துள்ள நிலையில், டிரைவரின் திறமையால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.
அரசு பஸ்களில் இருந்து சக்கரங்கள் கழன்று ஓடுவதும், இருக்கைகள் உடைந்து வெளியில் தெறிப்பதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அரசு எவ்வாறு அச்சாணி இல்லாமல் இயங்குகிறதோ, அதேபோல் தான் அரசு பஸ்களும், எந்த பிணைப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பஸ் விபத்து நடக்கும் போதும் ஓர் டிரைவரையோ, கண்டக்டரையோ, தொழில்நுட்பப் பணியாளரையோ பணியிடைநீக்கம் செய்து விட்டு கடமையை முடித்துக் கொள்கிறது திராவிட மாடல் அரசு.
பயணிகளை பாதிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் பஸ்களும் மாற்றப்பட வேண்டும்; தமிழகத்தை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற்றப்பட வேண்டும். இது தான் விபத்தில்லா பயணத்திற்கும், அரசு நிர்வாகத்திற்கும் எளிதான தீர்வு. இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025