9 வயது சிறுமியுடன் டிஸ்னிலாந்தில் திருமணம்: நால்வர் கைது!!
21 ஆனி 2025 சனி 22:04 | பார்வைகள் : 3395
ஒரு 22 வயது பிரிட்டன் நாட்டு ஆண் ஒருவர், 9 வயது உக்ரைனிய சிறுமியுடன் திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. டிஸ்னிலாந்து பரிஸ் பூங்காவில் இந்த சம்பவம் காலை நேரத்தில் நடந்துள்ளது, ஏனெனில் இப்படியான தனியார் நிகழ்வுகள் பொதுமக்கள் வருகைக்குத் தடை செய்யப்படும் நேரங்களில் நடத்தப்படுகின்றன.
சிறுமியின் வயது குறைவாக இருப்பதை கண்டுபிடித்த டிஸ்னி ஊழியர்கள் உடனடியாக நிகழ்வை நிறுத்தி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதைத் தொடர்ந்து மணமகன் உட்பட 41 வயதுடைய உக்ரைனியர் பெண்ணும் (சிறுமியின் தாயாக கூறப்படுபவர்) மற்றும் இரண்டு லாட்விய நபர்கள் (lettone) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணமகனாக வந்த நபர், இது ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு என்றும், தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குநர் என்றும் கூறியுள்ளார். ஆனால், டிஸ்னி ஊழியர்கள் உட்பட அந்த நிகழ்வில் இருந்த பலர், இது உண்மையான திருமணம் என்று நம்பியுள்ளனர்.
சிறுமிக்கு எந்தவிதமான வன்முறையும் நடக்கவில்லை என மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. டிஸ்னி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan