ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது.- மக்ரோன்
21 ஆனி 2025 சனி 23:10 | பார்வைகள் : 6989
பிரான்சின் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன், தனது ஈரானிய பதவியாளர் மசூத் பெஸெஷ்கியான் (Masoud Pezeshkian) உடன் தொலைபேசி உரையாடல் நடத்தியுள்ளார். உரையாடலில், ஈரான்–இஸ்ரேல் இடையிலான பதற்றம் மற்றும் ஈரானின் அணுஆயுத திட்டம் குறித்து முக்கியமாக பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மக்ரோன், வெளியிட்ட செய்தியில், 'போர் நிலைமையிலிருந்து வெளியேறவும், பெரிய அபாயங்களைத் தவிர்க்கவும், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் இணைந்து, நாங்கள் அணு ஒப்பந்த மீள்பேச்சுவார்த்தைகளை விரைவாக முன்னெடுக்க இருக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.
'ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது. அதன் நோக்கங்கள் அமைதிக்கானவையென்பதை உறுதி செய்ய முழுமையான உத்தரவாதங்களை வழங்க வேண்டியது அதன் பொறுப்பு' இதுபற்றி அதிகமாக கவலைக்குரிய விடயமாகக்க கருதுவததாக மக்ரோன் தெரிவித்துள்ளார்.
'போரில் இருந்து வெளியேற ஒரு வழி உள்ளது என்று எனக்கு நம்பிக்கை உள்ளது' எனவும் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இந்த உரையாடல், ஈரான்–இஸ்ரேல் இடையிலான பதற்றம் ஒன்பதாவது நாளை எட்டியபோது நடைபெற்றது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan