சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படம் இதுவா?

25 வைகாசி 2025 ஞாயிறு 17:43 | பார்வைகள் : 219
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படமானது 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.
இது தவிர ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பு நிறைவடைந்து விடும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதாவது ரஜினி அடுத்ததாக கேங்ஸ்டர் படத்தில் நடிக்க உள்ளாராம். ஏற்கனவே ரஜினியின் பாட்ஷா, கபாலி ஆகிய படங்கள் கேங்ஸ்டர் கதைக்களத்தில் வெளியானது.
தற்போது மீண்டும் ரஜினி, கேங்ஸ்டர் படத்தில் நடிக்க உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இயக்குனர் யார் என்பது குறித்து அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் கேங்ஸ்டர் படம் என்பதால் அது கார்த்திக் சுப்பராஜாக இருக்கலாம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.