Paristamil Navigation Paristamil advert login

குற்றங்கள் குறைந்த நாட்டில், மிகப்பெரிய சிறைச்சாலை!!

குற்றங்கள் குறைந்த நாட்டில், மிகப்பெரிய சிறைச்சாலை!!

28 சித்திரை 2016 வியாழன் 12:21 | பார்வைகள் : 19585


 
மெக்ஸிக்கோவில் ஒரு சட்டம் இருக்கிறது. 'கைதிகள் சிறையில் இருந்து தப்பித்தால் , அது சட்டவிரோத செயல் இல்லை. ஏனென்றால் மெக்ஸிக்கோவில் உள்ள அனைவருக்கும் சுதந்திரமாய் வாழ உரிமை உண்டு. சிறையில் இருந்து தப்பித்தால், அது சிறைச்சாலையின் தப்பு' என்பது அந்நாட்டு சட்டம்! 
 
பிரான்சில் ஒரு சிறை இருக்கிறது. Fleury-Mérogis எனும் நகரத்தில் உள்ள சிறைச்சாலையும், அதே பெயரை கொண்டிருக்கிறது.  ஐரோப்பிலேயே மிகப்பெரும் சிறைச்சாலை இது. இங்கு பல முக்கிய கைகளை சிறைவைத்திருந்தார்கள்/ வைத்திருக்கிறார்கள். 
 
 
1964 ஆம் ஆண்டு தொடங்கி, 1968 வரையான ஐந்து வருடங்கள் இதன் கட்டுமானபணி நடைபெற்றது. 180 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்ட இந்த சிறைச்சாலையில், பிரெஞ்சு கைதிகளை தாண்டி.. வேறு நாட்டினது முக்கிய குற்றவாளிகளையும் இங்கு சிறை வைத்திருக்கிறார்கள். 
 
சிறையின் ஒரு பகுதியில் 900 கைதிகள் படி, மொத்தம் நான்கு பகுதிகளில் 3600 கைதிகளை ஒரே சமயத்தில் இங்கு சிறை வைக்கலாமாம். இந்த சிறையில் இருந்து இதுவரை எந்த ஒரு கைதியும் தப்பித்தது இல்லை. அத்தனை அடுக்கு பாதுகாப்பு. ஆகாய மார்க்கமாகவோ, தரை மார்க்கமாகவோ எவரும் வெளியேற முடியாதபடி அமைக்கப்பட்டிருக்கிறதாம். மேலும், சிறைக்கைதி கோடாலி ஒன்றின் மூலம்,  தரையில் ஒரு வெட்டு கூட போட முடியாதாம். 
 
'பிரெஞ்ச் Robin Hood ' என அழைக்கப்படும் மகா திருடன் ஒருவரை இங்கு சிறைத்திருந்தார்கள். வங்கி கொள்ளை, கடத்தல், கொலை குற்றம் என எண்ணற்ற பாதகங்களை செய்ததற்காக இங்கு சிறைவைக்கப்பட்டிருந்தார். 
 
கடந்த வருடம் நவம்பரில் பரிசில் நடைபெற்ற இரட்டை தாக்குதலில் தொடர்புடைய பயங்கர குற்றவாளியான அப்தெல் சலாமையும் இங்குதான் சிறை வைத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
தனித்தீவில் சிறை வைப்பேன் என கவிஞர்கள் எழுதுவதுண்டு... சுற்றி கடல்கள் இல்லாவிட்டாலும், இந்த Fleury-Mérogis சிறைச்சாலை, 'தனி தீவு' தான்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்