Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்….

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்….

26 வைகாசி 2025 திங்கள் 05:51 | பார்வைகள் : 2992


உக்ரைன் மீண்டும் ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதற்குப் பதிலடியாக, உக்ரைனின் தலைநகர் கீவ் மீது ரஷ்யா பெரும் அளவிலான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களின் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை உக்ரைன் மீண்டும் ரஷ்யா மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

மாஸ்கோ நகரை இலக்காகக் கொண்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இது குறித்து ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 100 உக்ரைன் டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் நான்கு மணி நேரத்திற்குள் 95 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மாஸ்கோவை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட டிரோன்களும் அழிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

மத்திய நகரமான துலா மற்றும் மாஸ்கோவின் வடமேற்கே உள்ள ட்வெர் நகரிலும் வான் பாதுகாப்பு பிரிவுகள் டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியானது.

மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான், தலைநகருக்கு அருகில் 11 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்