எட்டாவது நாளாக வாடகை மகிழுந்து சாரதிகள் ஆர்ப்பாட்டம்!!

26 வைகாசி 2025 திங்கள் 08:00 | பார்வைகள் : 2428
இன்று மே 26, திங்கட்கிழமை எட்டாவது நாளாக வாடகை மகிழுந்து சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். காலை 7.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.
விமான நிலையங்கள், TGV நிலையங்கள் போன்றவற்றை இலக்கு வைத்து அதன் வீதிகளில் மிக மெதுவாக மகிழுந்துகளை செலுத்தில், வீதி போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதே அவர்களது ஆர்ப்பாட்டமாகும்.
கடந்த வாரம் முழுவதும் தலைநகர் பரிஸ் மற்றும் அதன் புறநகர்களை இலக்கு வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சாரதிகள், இன்று மார்செய் உள்ளிட்ட நகரங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்கு ஒரு கிலோமீற்றருக்கு €13 யூரோக்கள் கட்டணம் என மருத்துவ காப்புறுதி நிறுவனம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுகிறது. காத்திருப்பு நேரமும், மீண்டும் திரும்பி வருதலுக்கான கட்டணமும் தங்களுக்கு இல்லை எனவும், இதனால் தொழில் பாதிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மருத்துவ பயணங்களுக்கான செலவு 2019 ஆம் ஆண்டில் 3.07 பில்லியனாக இருந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் அது 6.74 பில்லியன் யூரோக்களாக உயர்ந்துள்ளது. இதனைக் குறைப்பதற்காகவே இந்த திட்டத்தை காப்புறுதி நிறுவனங்கள் இணைந்து நிறைவேற்றியுள்ளன.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3