T20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்த சுனில் நரைன்

26 வைகாசி 2025 திங்கள் 11:43 | பார்வைகள் : 645
KKR அணிக்காக சுனில் நரைன் T20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரின் 68 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது, 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 278 ஓட்டங்கள் குவித்தது.
அதிரடியாக ஆடிய ஹென்ரிச் கிளாசன், 39 பந்துகளில் 9 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் உட்பட 105 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடர்ந்து, 279 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி, 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 168 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம், ஹைதராபாத் 110 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் கொல்கத்தா வீரர் சுனில் நரைன், 2 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம், T20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு முதல் கொல்கத்தா அணிக்காக ஆடி வரும் சுனில் நரைன் அந்த அணிக்காக இதுவரை 210 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இதன் மூலம், ஒரு அணிக்காக T20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக, நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக இங்கிலாந்து வீரர் சமித் படேல் 208 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.