Paristamil Navigation Paristamil advert login

2026 ஐபிஎல் தொடரில் CSK அணியில் சுரேஷ் ரெய்னா…?

2026 ஐபிஎல் தொடரில் CSK அணியில் சுரேஷ் ரெய்னா…?

26 வைகாசி 2025 திங்கள் 11:43 | பார்வைகள் : 673


2026 ஐபிஎல் தொடரில் CSK அணியில் சுரேஷ் ரெய்னாவிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது.

5 முறை கோப்பை வென்று ஐபிஎல் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த CSK அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

2026 ஐபிஎல் தொடரில், மீண்டும் தனது ஆதிக்கத்தை காட்ட CSK அணி பல்வேறு மாற்றங்களுக்கு தயாராகி வருகிறது.

ஆரம்பகட்ட போட்டிகளில் துடுப்பாட்டத்தில் மோசமாக ஆடி வந்த சென்னை அணி, தொடரின் பிற்பகுதியில் ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல், டிவால்ட் பிரேவிஸ் ஆகியோர் அணியில் இணைக்கப்பட்ட பிறகு துடுப்பாட்டத்தில் அசத்தியது.  

அதே போல், அடுத்த ஐபிஎல் தொடருக்கு புதிய துடுப்பாட்ட பயிற்சியாளரை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் CSK அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக, முன்னாள் CSK வீரர் மைக் ஹஸி செயல்பட்டு வருகிறார். அவரை மாற்றி விட்டு, சுரேஷ் ரெய்னாவை நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகாஷ் சோப்ராவுடன் சுரேஷ் ரெய்னா அளித்த பேட்டி ஒன்றில் அவரே இதை தெரிவித்துள்ளார். அந்த பேட்டியில், துடுப்பாட்ட பயிற்சியாளருக்காக CSK அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலதிக தகவலுக்கு, அவர் பெயர் S-ல் தொடங்குமா என ஆகாஷ் சோப்ரா கேட்க, ரெய்னா சிரித்துக்கொண்டே "அவர் இந்த அணிக்காக அதிவேக அரைசதம் அடித்துள்ளார்" என கூறினார்.

2014 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், சுரேஷ் ரெய்னா 16 பந்துகளில் அரைசதம் அடிப்பார். அது CSK அணிக்காக ஒரு வீரர் அடித்த அதிவேக அரைசதம் ஆகும்.

12 ஆண்டுகளாக, CSK அணிக்காக 176 போட்டிகளில் ஆடியுள்ள சுரேஷ் ரெய்னா, 1 சதம், 33 அரைசதம் உட்பட 4687 ஓட்டங்கள் குவித்துள்ளார்.    

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்