Paristamil Navigation Paristamil advert login

அவசர அழைப்பு இலக்கங்கள் - ஒரு அத்தியாவசிய பட்டியல்!

அவசர அழைப்பு இலக்கங்கள் - ஒரு அத்தியாவசிய பட்டியல்!

26 சித்திரை 2016 செவ்வாய் 12:03 | பார்வைகள் : 20108


பிரான்சில் வசிக்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்கள் சிலவற்றை பார்க்கலாம். 
 
அவரச உதவிக்கு - 112 க்கு அழைப்பை ஏற்படுத்துங்கள். இந்த அழைப்பிற்கு எந்தவித கட்டணங்களும் இல்லை. மேலும் உங்களுடைய அழைப்பு 9 வினாடிக்குள் ஏற்கப்பட்டு விடும். பிரான்சில் சகல வித தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். 
 
மேலும், பிரான்சில் மட்டுமில்லாது ஐரோப்பா எங்கிருந்தும் 112 எனும் இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தலாம். மொத்தம் 40 மொழிகளில் இருந்து, உங்களுக்கு வேண்டிய மொழியை நீங்கள் தெரிவு செய்து பேசலாம். 
 
*********
 
மேலும் சில அவசர அழைப்பு இலக்கங்கள்! 
15 - மருத்துவ உதவி மற்றும் உலங்குவானூர்தி, வீதி விபத்து.
17 - காவற்துறை.
18 - தீயணைப்பு துறை. 
115 - சமூக பிரச்சனைகள்.
119 - சிறுவர் துஷ்பிரயோகம்.
116000 - காணமல் போன சிறுவர்கள் பற்றிய உதவி. 
 
**********
 
பிரெஞ்சு மொழி உதவிகள் :
 
அவசர உதவி தேவை - C'est un cas d'urgence.
என்னுடைய பெயர் - Je m'apelle:
என்னுடைய தொலைபேசி இலக்கம் - Mon numéro de téléphone est:
நான் வசிக்கும் இடம் - J'habite a
 
********
 
அவசர மருத்துவர் : 01 43 37 77 77
பற்சிகிச்சை உதவி : 01 43 37 51 00  
வேதியல் : 01 48 74 65 18 / 01 45 62 02 41
நஞ்சு / விஷம் : 01 40 05 48 48  
கட்டாயத்திருமணம்: 01 40 33 80 60
எரிவாயு கசிவு: 01 43 35 40 87
மின் கசிவு : 01 43 35 40 86
 
*******
 
மேற்படி இலக்கங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அவசரத்தின் போது பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள். 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்