பிரிஜிட் மக்ரோன் தனது கணவரின் கன்னத்தில் அறைந்தாரா? வீடியோ சர்ச்சைக்கு பதிலளித்த ஜனாதிபதி மக்ரோன்!

26 வைகாசி 2025 திங்கள் 14:59 | பார்வைகள் : 2808
ஞாயிற்றுக்கிழமை இரவு, வியட்நாமின் ஹனாயில் நடைபெற்ற பயணத்தின் போது, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜித் மக்ரோன் இடையே நிகழ்ந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டது.
வீடியோவில், பிரிஜித் மக்ரோனின் கை மற்றும் சிவப்பு ஜாக்கெட் மட்டும் தெரியும் நிலையில், அவர் கணவரை தள்ளுவது போல் தோன்றுகிறது. அதற்குப் பின்னர் இருவரும் சேர்ந்து விமானத்திலிருந்து இறங்கி, வியட்நாம் அதிகாரிகளை சந்திக்கிறார்கள். ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தன் மனைவிக்கு கை கொடுக்க முயற்சிக்கிறார், ஆனால் அவர் அதைக் கவனிக்கவில்லை போல தெரிகின்றது.
இதில் பிரிஜித் மக்ரோன் தனது கணவரின் முகத்தை தள்ளுவது போன்ற காட்சியை, மக்கள் "சண்டை" என்று விமர்சித்தனர். ஆனால் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இதை முற்றிலும் மறுத்து "நாங்கள் சிறிது சண்டை போடுவது போல, உண்மையில் நகைச்சுவை செய்துகொண்டு இருந்தோம் என விளக்கம் அளித்துள்ளார்.
நாங்கள் நன்றாகவே பேசிக்கொண்டு இருந்தோம். கடந்த சில வாரங்களாக நான் கொகைன் வைத்திருந்தேன், துருக்கிய ஜனாதிபதியுடன் கைகோர்த்து சண்டை போட்டேன், இப்போது என் மனைவியுடன் தகராறு செய்கிறேன் என்று கூறுகிறார்கள். இதில் எதுவும் உண்மை இல்லை என அவர் கூறியுள்ளார்.
ரஷ்யர்களும் மற்றும் பிரான்ஸில் உள்ள சிலரும் இந்த வீடியோவை தங்களுக்கான உந்துதலாக பயன்படுத்துகிறார்கள் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். முடிவில் "மக்கள் உண்மையான செய்திகளில் கவனம் செலுத்த வேண்டும்" என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3