'எஸ்.டி.ஆர் 49' திரைப்படம் கைமாறுகிறதா?

26 வைகாசி 2025 திங்கள் 15:21 | பார்வைகள் : 413
சிம்பு நடிக்க இருக்கும் 49வது திரைப்படம் குறித்து அறிவிப்பு சில நாட்களுக்கு முன் வெளியானது என்பதும், சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது என்பது தெரிந்தது.
பார்க்கிங்’ இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்ததாகவும், இந்த படத்தில் நாயகியாக காயடு லோஹர் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் சந்தானம் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டதால், இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திடீரென இந்த படத்தின் தயாரிப்பாளர் அமலாக்கத்துறை சோதனை காரணமாக தலைமறைவாக இருப்பதால், இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது, இந்த படத்தை வேறு தயாரிப்பாளரிடம் கொடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும், மிக விரைவில் புதிய தயாரிப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.