Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் ரஜினியுடன் இணைவரா மணிரத்னம் ?

மீண்டும் ரஜினியுடன் இணைவரா மணிரத்னம் ?

26 வைகாசி 2025 திங்கள் 16:21 | பார்வைகள் : 861


இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் பல தனித்துவமான படங்களை ரசிகர்களுக்கு விருந்தாக படைத்து வருகிறார்.அந்த வகையில் தற்போது இவரது இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக்செல்வன், ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். ரவி.கே.சந்திரன் இதன் ஒளிப்பதிவு பணிகளில் கவனித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.

இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. அதே சமயம் சமீபத்தில் இதன் இசை வெளியீட்டு விழாவும் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் மணிரத்னம் சமீபத்தில் நடந்த பேட்டியில் கலந்து கொண்ட போது அவரிடம், மீண்டும் ரஜினியை வைத்து எப்போது படம் பண்ண போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு மணிரத்னம், “அவருக்கேற்ற மாதிரி கதை இருந்தது என்றாலும், அவருக்கு டேட் இருந்தது என்றால் நான் அவரிடம் கண்டிப்பாக கேட்பேன். ஒரு பெரிய நடிகரை வைத்து படம் பண்ணுகிறோம் என்றால் அதற்கு ஏற்ற தீனி இருக்க வேண்டும். சிம்பிள் ஸ்டோரியை வைத்துக்கொண்டு அவ்வளவு பெரிய நடிகரிடம் கேட்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் – ரஜினி கூட்டணியில் வெளியான தளபதி திரைப்படம் இன்று வரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. எனவே இந்த கூட்டணி மீண்டும் இணைந்தால் ரசிகர்கள் அதைக் கொண்டாட எப்பொழுதுமே தயாராக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்