தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு வழங்கும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி

26 வைகாசி 2025 திங்கள் 16:30 | பார்வைகள் : 1846
செட்டிகுளம் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி ஆதரவு வழங்கும் என அதன் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளரும், ஊடகப் பேச்சாளருமான க.துளசி தெரிவித்துள்ளார்.
வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று(25.05) மாலை இடம்பெற்ற ஜனநாயக தேசியக் கூட்டணியின் உயர் மட்டக் குழுக் கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரதேச சபையைப் பொறுத்த வரை ஐக்கிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது. அங்கு ஆட்சி அமைப்பதற்காக எமது ஆதரவைக் கோரியும் உள்ளது. அந்த வகையில், தமிழரசுக் கட்சியும் அங்கு ஆசனங்களைப் பெற்றுள்ளமையால் செட்டிகுளம் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கான முழுமையான ஆதரவை ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வழங்கும்.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3