Paristamil Navigation Paristamil advert login

பிரான்சின் மூன்று துப்பாக்கி வீரர்கள்.

பிரான்சின் மூன்று துப்பாக்கி வீரர்கள்.

25 சித்திரை 2016 திங்கள் 13:47 | பார்வைகள் : 20534


 
பிரான்ஸ், இலக்கியங்களுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதே அளவு சிறுவர் இலக்கியங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இன்று, 170 வருடங்களுக்கு முன்னர் சிறுவர்களுக்காக எழுதப்பட்ட பெரும் சிறுவர் இலக்கிய நாவல் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். 
 
Les Trois Mousquetaires
 
தமிழில் - மூன்று துப்பாக்கி வீரர்கள். ஒரு சிறுவனும், மூன்று துப்பாக்கி வீரர்களும் பற்றிய நாவல் இது. 1844ஆம் ஆண்டு தொடராக வெளிவந்து, பின்னர் புத்தகமாக தொகுக்கப்பட்ட நாவல். 
 
d'Artagnan எனும் சிறுவனை மைய்யப்படுத்தி, Athos, Aramis, மற்றும் Porthos என மூன்று வித்தியாசமான குணாதிசயங்களை கொண்ட துப்பாக்கி வீரர்களையும் கொண்டு, கொஞ்சமும் தொய்வில்லாமல் பரபரப்பாக எழுதப்பட்ட இந்த நாவல் சிறுவர்களிடையே பெரும் அலையை உண்டாக்கியது. 
 
சாகசங்கள் நிறைந்த இந்த நாவல் 1844ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரை தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் வெளிவந்தது. முதல் பகுதி வெளியானதுமே, சிறுவர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகி, இரண்டாவது பகுதிக்காக அதிக பதிப்புகள் அடிக்கவேண்டியதாய் போயிற்று. 
 
பின்னர் d'Artagnan எனும் இக்கதையின் நாயகனை மையமாக வைத்து, Twenty Years After மற்றும்,  The Vicomte of Bragelonne: Ten Years Later. என இரண்டு நாவல்கள் எழுதப்பட்டன. 
 
நாவலை எழுதியவர், பிரெஞ்சு இலக்கிய சக்கரவர்த்தி Alexandre Dumas ஆகும். இவருடன் சேர்ந்து எழுத்தாளர் Auguste Maquetஉம் உதவிகள் செய்திருக்கிறார். 
 
பின்னர் இவ் நாவல், திரைப்படமாக (The Three Musketeers) வெளிவந்து சக்கைபோடு போட்டது. இந்த நாவல் ஆங்கிலம், ருஷ்யன், ஸ்பானிஷ் உட்பட எண்ணற்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இன்றுவரை விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்