Paristamil Navigation Paristamil advert login

Saint-Denis : மகனின் தண்ணீர் போத்தில் தண்ணீர் பகிய தாய் - விஷம் பரவி பலி!!

Saint-Denis : மகனின் தண்ணீர் போத்தில் தண்ணீர் பகிய  தாய் - விஷம் பரவி பலி!!

26 வைகாசி 2025 திங்கள் 17:21 | பார்வைகள் : 4077


தனது மகனின் தண்ணீர் போத்தலில் இருந்து தண்ணீரை பருகிய தாய் ஒருவர் உடம்பில் விஷம் பரவி பலியாகியுள்ளார்.

இன்று மே 26, திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம் Saint-Denis (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. Boulevard Finot அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 58 வயதுடைய பெண் ஒருவர் அதிகாலை 4.30 மணி அளவில் சமையலறையில் சுயனினைவின்றி இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது 25 வயதுடைய மகன், உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினரை அழைத்துள்ளார்.

மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவ இடத்தை வந்தடைந்தபோது, அப்பெண் உயிரிழந்துள்ளதாகவும், அவர் மகனின் தண்ணீர் போத்தலில் உள்ள தண்ணீரை இறுதியாக அருந்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

தண்ணீர் ஆய்வுக்குட்படுத்திய போது GHB (Gamma-hydroxybutyrate) எனும் போதைப்பொருள் கலந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை உட்கொண்டதை அடுத்தே அப்பெண்ணின் உடலில் விஷம் பரவியுள்ளது.

மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

13 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்