Paristamil Navigation Paristamil advert login

அர்ஜெண்டினாவில் திடீரென இடிந்து விழுந்த தியேட்டர்!

அர்ஜெண்டினாவில் திடீரென இடிந்து விழுந்த தியேட்டர்!

26 வைகாசி 2025 திங்கள் 18:11 | பார்வைகள் : 1327


அர்ஜெண்டினாவில்  Final Destination படம் பார்க்கும்போது திடீரென தியேட்டர் இடிந்து விழுந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஹாலிவுட் திரைப்படங்களில் Final Destination திரைப்பட தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இந்த படம் 2000ல் வெளியாகி பெரும் ஹிட் அடித்த நிலையில் அடுத்தடுத்து பல பாகங்கள் வெளியானது. அப்படியாக தற்போது Final Destination Bloodlines என்ற புதிய பாகம் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை அர்ஜெண்டினாவில் உள்ள தியேட்டர் ஒன்றில் பலர் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்த திரையரங்க மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் பலரும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து உயிர் தப்பிய ஒருவர் பேசியபோது, “முதலில் எல்லாறும் அலறவும் படத்தில்தான் இப்படி நடக்கிறது என நினைத்தேன், என் மீது சிறு பகுதி விழுந்தபோதுதான் பதறி அடித்து ஓடினேன்” என்று கூறியுள்ளார்.

Final Destination படம் பார்க்கும்போது அந்த படத்தில் வருவது போன்றே ஒரு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்