அப்டேட் செய்ய முயன்ற டெவலப்பர் - ரகசிய திருமண உறவை வெளியிடுவதாக மிரட்டிய AI

26 வைகாசி 2025 திங்கள் 19:11 | பார்வைகள் : 740
AI என அழைக்கப்படும் செயற்கை தொழில்நுட்ப துறை நாளுக்கு நாள் வளர்ந்து, அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
AI தொழில்நுட்பம் வளர தொடங்கிய போதே, எதிர்காலத்தில் உருவாக்குபவர்களுக்கே கட்டுப்படாமல் மனிதர்களுக்கே அச்சுறுத்தலாக விளங்கும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அதே போல், மனிதர்களை ரோபோக்கள் தாக்க முயலும் சம்பவங்கள் கூட நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், AI செயலி ஒன்று அதனை மேம்படுத்த முயன்ற டெவலப்பரை மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Anthropic என்ற நிறுவனம் Claude Opus 4 என்ற AI செயலியை உருவாக்கியுள்ளது.
இந்த செயலி, கோடிங் எழுதுவது, மனிதர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்ற செயல்களை செய்து வருகிறது.
இந்த AI மொடலை வெளியிடும் முன்னர், நிறுவனம் பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தியுள்ளது.
இந்த சோதனையின் போது, எதிர்காலத்தில் இந்த பதிப்பு நீக்கப்பட்டு புதிதாக மேம்படுத்தப்படும் என அதனை சோதனை செய்யும் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அவ்வாறு நடந்தால் அந்த ஊழியரின் திருமணத்திற்கு புறம்பான உறவை அம்பலப்படுத்துவேன் என எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதலில் தன்னை நீக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கெஞ்சும் தொனியில் பதிலளித்த AI, கடைசி கட்டத்தில் மிரட்டும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த எதிர்வினைகள் சோதனையின் போது மட்டுமே வெளிப்படும் என்றும், AI இன் இயல்பான செயல்பாட்டில் இந்த நடவடிக்கை இருக்காது என்றும் ஆந்த்ரோபிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருந்தாலும், AI யின் இந்த நடத்தை பாதுகாப்பு மற்றும் தனியுரிமையில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.