Paristamil Navigation Paristamil advert login

Duplomb சட்டமாற்றததை எதிர்த்து பாராளுமன்றம் முற்றுகை!!

Duplomb சட்டமாற்றததை எதிர்த்து பாராளுமன்றம் முற்றுகை!!

26 வைகாசி 2025 திங்கள் 18:52 | பார்வைகள் : 1170


 

விவசாயத் தொழிலின் கட்டுப்பாடுகளை தளர்த்தும் நோக்குடன் கொண்ட Duplomb சட்டமாற்ற மசோதாவை எதிர்த்து  இவ்வாரம் பரிஸ்  பாராளுமன்ற  முன்னிலையில் விவசாயிகள் போராட்டம் நடாத்துகின்றனர்.

இந்த சட்டமாற்றமம் ஏற்கெனவே தடை செய்யப்பட்ட சில பூச்சிக்கொல்லிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு அனுமதிக்க திட்டமிடுகின்றது. இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சி பாரளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Gironde மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பாரளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் அலுவலகங்கள் மீது ஊரக ஒன்றிணைவுப் பேரணி  (Coordination Rurale) என்ற விவசாய சங்கத்தின் பெயருடன்  இவர்களின் போராட்டம் தங்களிற்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் மெலோன்சோனின் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலாக, Coordination Rurale பிரதிநிதி 'இது முரண்பாடுகளை வெளிப்படுத்தும் செயல்கள் தான். ஆனால் எவ்விதமான மிரட்டலும் இல்லை' எனக் தெரிவித்துள்ளார்.

Duplomb சட்டமாற்றத்தின் – முக்கிய அம்சங்கள்

விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் பயிர் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்

7 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட ஒரு பூச்சிக்கொல்லியை மீண்டும் அறிமுகப்படுத்த அனுமதி

விவசாயிகள் வேலை செய்யும் சூழலை 'எளிமைப்படுத்துதல்' என்பது அரசின் நோக்கம்

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்