Paristamil Navigation Paristamil advert login

தேசிய அச்சுறுத்தல் - இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக உள்துறை அமைச்சர் நடவடிக்கை!!

தேசிய அச்சுறுத்தல் - இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிராக உள்துறை அமைச்சர் நடவடிக்கை!!

26 வைகாசி 2025 திங்கள் 19:52 | பார்வைகள் : 2993


இன்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புபருனோ ரத்தையோ, தீவிர இஸ்லாமியத்துக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் சகோதரர்கள் சங்கம் (FRÈRES MUSULMANS) பயன்படுத்தும் 'இரகசிய ஊடுருவல்' (entrisme) முறையை எதிர்த்து, அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

அவர், 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இஸ்லாமியம் மற்றும் சமூக விலகலுக்கு எதிரான போராட்டத்திற்கான துறை சார்ந்த குழுக்ககளான CLIR (LES CELLULES DÉPARTEMENTALES DE LUTTE CONTRE L’ISLAMISME ET LE REPLI COMMUNAUTAIRE) என்ற அமைப்புகளை பலப்படுத்தி, இஸ்லாமிய தீவிரவாதத்துடன் தொடர்புடைய விளையாட்டு கழகங்கள், கலாசார அமைப்புகள் போன்றவற்றில் திடீர் சோதனைகளை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளார்.

மேலும், புதிய தகவல் சேகரிப்பு அணிகள், நிர்வாக நடவடிக்கைகளாக பொது நிதி முடக்கம், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் இடங்களை மூடுதல், சட்ட நடவடிக்கைகள் போன்றவை தீவிரமாகச் செயல்படுத்தப்படும்.

முன்னாள் உள்துறை செயலாளர் அலெக்சோந்த் பிருகேரும் (Alexandre Brugère) பெரும் அச்சுறுத்தல் உள்ள பகுதியான Hauts-de-Seine பகுதியில் இந்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்த இருப்பதாக உறுதியளித்துள்ளார். இது முன்னாள் உள்துறை அமைச்சரும் தற்பாதைய நீதியமைச்சருமான ஜெரால்ட் தர்மனின் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

12 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    3

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்