Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பிய பொருட்களின் மீதான சுங்கவரி நடவடிக்கைகள் ஜூலை வரை இடைநிறுத்தம்!

ஐரோப்பிய பொருட்களின் மீதான  சுங்கவரி நடவடிக்கைகள் ஜூலை வரை இடைநிறுத்தம்!

26 வைகாசி 2025 திங்கள் 22:08 | பார்வைகள் : 3166


அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்தையும் நாடவில்லை எனக் கூறி, ஜூன் 1 முதல் 50% சுங்கவரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். 

இதற்கு பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியத்தின்  தலைவி உர்ஸுலா வான் டெர் லெயன் (Ursula von der Leyen), டிரம்புடன் "தொலைபேசி அழைப்பு" நடந்ததாகக் கூறி, ஜூலை 9 வரை பேச்சுவார்த்தைக்கு நேரம் தேவை எனவும், ஐரோப்பா பேச்சுவார்த்தையை விரைவாகவும் உறுதியாகவும் முன்னெடுக்கத் தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு பதிலளித்து, பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தை வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

தேவையானால் 95 பில்லியன் யூரோ மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிகளுக்கு சுங்கவரி விதிப்பதற்கும், உலக வர்த்தக அமைப்பில் முறையிடுவதற்கும் ஐரோப்பா தயாராக உள்ளது என அவர் கூறியுள்ளார். 

தற்போதுள்ள சுங்கவரி நடவடிக்கைகள் ஜூலை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன, ஆனால் 10% வரி தொடர்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்